கனிவான செந்தமிழால் காதலர் தினந் தன்னை
கவியாலே கனியவைக்க களமமைத்துத் தந்த
மொழிமேலே பற்றுவைத்து மின்னிணைய வசமாக்கி
அழியாத செந்தமிழை அனைத்துலகம் அறிவதற்கு
தமிழ்மணத்தால் பிளாக்கரிலே மிளிரவைக்கு எம்முறவே
காதலர்க்கு ஓர்தினமாம் காதலோ தினமென்று
விதவிதமாய் கவிதொடுப்போர் வரிசையிலே நானுமிங்கே
மின்னிணையத் தொடர்பாலே மனத்தெழுந்த பாமாலை
கன்னித் தமிழ்கொண்டு சாற்றுகிறேன் காணீரோ!
ஆணினமும் பெண்ணினமும் அன்பாலே அருகிணைந்து
பேணிநிற்கும் புதுவுறவே காதலின் பிறப்பாகி
கண்களைத் தூதுவிட்டு துணையின்பக் கூடமைத்து
திண்மை நிலையினராய் உயர்புலத்து வாழ்வமைத்து
ஏமக்கிழத்தியவள் மென்மையுறு இதயத்தில்
தூமலரின் பண்பாகி ஞாலம் ஒருங்கறிய
தழைகாதல் வாலறிவன் ஆக்க வகையறிந்து
மழைகாணும் பயிரினம் போல் மகிழ்வுறு காதலது
அழுக்குடம்பானாலும் அன்பிற்குண்டோ அடைக்குந்தாளென
ஒழுக்கங் காத்திருந்து செறிகாமந் தனையடக்கி
மனவரசால் மையலுறும் மன்னவரும் பலருண்டு
இன்பரசத் தேன்பருகும் இளையோர்கள் மத்தியிலே
பொன்னின் அணிமலராய் பூத்திருக்கும் பூவையர்கள்
தன்மேனி முற்றமுன்னர் தனிமரமாய் ஆவதுண்டு
இனியர் இணைசேரார் ஈர்க்குங்கண் ஞாலத்தே
தனிமைக்கே அவரே கரியாகி நிறங்பதுவும்
காமம் வீழின்பக் கடலான காதலுக்கே
சேமமறு ஒளியூடல் சேர்ந்தங்கே மருவுவதால்
கூடியுணர்வாரே தாமிசைந்து பலகாலம்
ஈடில்ல தோரின்ப விருந்தாகும் காதலதை
தோற்றவரும் வெல்வாரே துணைபோவார் முயற்சியினால்
ஏற்றவர் கொடியிடையாள் இனிப்பான காதலுக்கு
அழகரிவை மனத்தகத்தேம அளித்தழிக்கும் ஆடவரும்
உழல்கின்ற வையகத்தே காதலால் நோவதுண்டு
மனைக்கொளி சேர் மங்கையரை மன்னவர் மனங்கனிந்து
தனக்குறவாய்க் கொண்டபின்னும் தினந்தோறுங் காதலிப்பர்
அரிவையர் ஆடவரேன் அகிலம் வாழும்
விரிசடையோன் விரும்பியளித்த உயிரினம் யாவுமே
காதலில் துவன்று கண்ணினாற் பேசி
நோதலில்லா ஆசையொழிய மனமது ஒன்றி
பூவார் குழற்கூந்தல் மையலால் மயங்கி
பூவாலே தூதுவிடும் புனிதநாள் எண்ணியங்கே
தேன்கமழின்பக் காதலர்க்கோர்தினம் காதலோ தினமென்று
என்னரும் பேரன் புகட்டிய தமிழால்
அன்பொடு தொடுத்தேன் அனைவருங் காண
கண்டு மகிழ்ந்தவர் கருப்பிழை யுணர்ந்தோர்
அரும்பிடு குறைகள் அருஞ்சொல் திருத்தி
தருநிழலீய்வது தமிழ்த்தாய் இயல்பே!!
நன்றி
Sonntag, 14. Februar 2010
Freitag, 12. Februar 2010
Mittwoch, 10. Februar 2010
கும்பழாவழைப் பிள்ளையார்
பவனஞ் சுடர்கங்கை பார்வெளியை ஆட்டிடும்
பரமசிவஞான மகனே
புவனங்கள் ஈரேழும் அடக்கியே காத்திடும்
புவனேஸ்வரி யீன்ற புவனே
கவளமா முகத் தண்ணலே காத்திடும்
அங்குச பாசக் கையனே
குவளைக் கண்ணியைச் சென்னியில் மிலைந்த
கும்பழாவளைத் தெய்வமே.
காண்பவர்க் கரியனே காட்சிக் கினியனே
கருணை சொரி ஆனை முகனே
மாண்பெருகு மாருத வல்லிக்குப் பிணி தீர்த்து
மனம் பூத்து மகிழ் வுண்டாக
விண்டுவின் தளைநீக்க வீரமுருகேசனுடன்
விரும்பி யுரை செய்த விமலா
கொண்டல் தவழ் அளவையெனுங் குருபதியில்
கோவில் கொண்ட கும்பழாவழைத் தெய்வமே.
தெங்குகுலை சொரிகின்ற தேனீரால் முழுக்காடும்
தேவர ளவையூ ருறையு நாதா
பங்குகொள் தொண்டரின் பாசவனை யறுக்கின்ற
பண்ணவன் பெற்ற மகனே
துங்குவெண் நெஞ்சினில் பங்கு கொள்
ஆணவப் பாசத்தை நீக்குகின்ற
அங்குச பாசத்தாலதை அடக்கியே காத்திடும்
கும்பழாவளைத் தெய்வமே.
புவனங்கள் ஈரேழும் அடக்கியே காத்திடும்
புவனேஸ்வரி யீன்ற புவனே
கவளமா முகத் தண்ணலே காத்திடும்
அங்குச பாசக் கையனே
குவளைக் கண்ணியைச் சென்னியில் மிலைந்த
கும்பழாவளைத் தெய்வமே.
காண்பவர்க் கரியனே காட்சிக் கினியனே
கருணை சொரி ஆனை முகனே
மாண்பெருகு மாருத வல்லிக்குப் பிணி தீர்த்து
மனம் பூத்து மகிழ் வுண்டாக
விண்டுவின் தளைநீக்க வீரமுருகேசனுடன்
விரும்பி யுரை செய்த விமலா
கொண்டல் தவழ் அளவையெனுங் குருபதியில்
கோவில் கொண்ட கும்பழாவழைத் தெய்வமே.
தெங்குகுலை சொரிகின்ற தேனீரால் முழுக்காடும்
தேவர ளவையூ ருறையு நாதா
பங்குகொள் தொண்டரின் பாசவனை யறுக்கின்ற
பண்ணவன் பெற்ற மகனே
துங்குவெண் நெஞ்சினில் பங்கு கொள்
ஆணவப் பாசத்தை நீக்குகின்ற
அங்குச பாசத்தாலதை அடக்கியே காத்திடும்
கும்பழாவளைத் தெய்வமே.
Abonnieren
Posts (Atom)
